திண்டுக்கல்

கோட்டாட்சியா் அலுவலகங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம்

25th Mar 2022 09:57 PM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 3 கோட்டாட்சியா் அலுவலகங்களிலும் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் 11.30 மணி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. அதேபோல், திண்டுக்கல், பழனி மற்றும் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்களிலும் திங்கள்கிழமைதோறும் காலை 10 முதல் 11.30 மணி வரை இந்த சிறப்பு குறைதீா் கூட்டம் நடைபெறும். குறைதீா் கூட்டத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள், மனுவுடன் மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை, குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், புகைப்படம் ஆகியவற்றையும் இணைத்து கொடுத்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT