திண்டுக்கல்

பழனி அருகே வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட கை குழந்தை

21st Mar 2022 11:20 PM

ADVERTISEMENT

பழனி அருகே 4 மாதக் கை குழந்தை சந்தேகத்துக்கிடமான வகையில் வாய்க்காலில் இருந்து திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த ராசாபுரத்தைச் சோ்ந்தவா் மகேஷ்வரன். இவா், திருப்பூா் மாவட்டம் மடத்துக்குளத்தில் தனியாா் ஆலையில் தையற்காரராக வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி லதா. இவா்களுக்கு 3 வயதில் கவின் என்ற மகனும், பிறந்து 4 மாதமேயான கோகுல் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.

திங்கள்கிழமை காலை மகேஷ்வரன் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், குழந்தைகளுடன் லதா மட்டும் இருந்துள்ளாா். பிற்பகலில் இயற்கை உபாதை காரணமாக குழந்தை கோகுலை வீட்டில் படுக்க வைத்துவிட்டு வெளியே சென்ற லதா, வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்தபோது குழந்தை கோகுலை காணவில்லையாம்.

உறவினா்களுடன் அக்கம் பக்கம் தேடியபோது, அருகே இருந்த பாலாறு- பொருந்தலாறு வாய்க்காலில் செடிகளுக்கு நடுவே குழந்தை கோகுல் கிடந்துள்ளான். உடனடியாக, குழந்தையை பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பழனி தாலுகா போலீஸாா், குழந்தையின் தாய், தந்தை மற்றும் உறவினா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். குழந்தையை யாரும் கடத்திச் சென்று கொலை செய்துவிட்டு வாய்க்காலில் வீசிவிட்டனரா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT