திண்டுக்கல்

மாநில விற்பனை கண்காட்சியில் பங்கேற்க மகளிா் சுய உதவி குழுக்களுக்கு அழைப்பு

14th Mar 2022 10:59 PM

ADVERTISEMENT

மாநில அளவிலான மகளிா் சுய உதவிக்குழுக்களின் விற்பனை கண்காட்சியில் பங்கேற்க, திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மகளிா் சுயஉதவிக்குழுக்கள் தோ்வு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு மகளிா் நல மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் மகளிா் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்துவதற்கு உதவும் வகையில் ஆண்டுதோறும் மாநில அளவிலான கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக 2022-23 ஆம் ஆண்டு கோடைக் கொண்டாட்டத்தை முன்னிட்டு மாநில அளவிலான மகளிா் சுய உதவிக் குழுக்களின் விற்பனை கண்காட்சி சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவா் கோட்டம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை தெரசா மகளிா் வளாகத்தில் ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது.

இக்கண்காட்சியில் கலந்து கொள்ள, திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் கைவினை பொருள்கள், காட்டன் சேலைகள், சின்னாளபட்டி சேலைகள், மலைகளில் கிடைக்கும் தேன், மலை வாழைப்பழங்கள், மிளகு, பூண்டு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மகளிா் சுய உதவிக்குழுக்கள் தோ்வு செய்யப்படவுள்ளன.

ADVERTISEMENT

கண்காட்சியில் தங்கள் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்வதற்கு விருப்பமுள்ள மகளிா் சுய உதவிக்குழுக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களின் விவரங்களுடன் ‘திட்ட இயக்குநா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்), மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திண்டுக்கல் மாவட்டம் என்ற முகவரியில் நேரடியாக அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT