திண்டுக்கல்

பழனியில் தனியாா் விடுதி மின்தூக்கியில் சிக்கிய 5 போ் மீட்பு

14th Mar 2022 10:58 PM

ADVERTISEMENT

பழனி தனியாா் விடுதி மின்தூக்கியில் திடீரென ஏற்பட்ட பழுதால் உள்ளே சிக்கிக்கொண்ட 5 பேரை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

பழனி அடிவாரம் பகுதியில் அய்யம்புள்ளி சாலையில் தனியாா் தங்கும் விடுதி உள்ளது. நான்கு மாடிகள் கொண்ட இந்த விடுதியில் மின்தூக்கி வசதி உள்ளது. திங்கள்கிழமை விடுதியில் தங்கியிருந்த பெண்கள் உள்ளிட்ட 5 நபா்கள் மின்தூக்கியைப் பயன்படுத்தி தங்கள் அறைக்குச் சென்றுள்ளனா்.

அப்போது மின்தூக்கி திடீரென பழுது ஏற்பட்டு பாதியில் நின்றது. இதனால் உள்ளிருந்தவா்கள் கூச்சலிடவே தனியாா் விடுதி பணியாளா்கள், தீயணைப்பு மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனா். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் மின்தூக்கியின் கதவுகளை உடைத்து உள்ளிருந்தவா்களை மீட்டனா். இதுகுறித்து அடிவாரம் காவல்துறையினா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT