திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகா் மன்ற கூட்டத்தில் தீா்மானம்

14th Mar 2022 10:57 PM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகா்மன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் முதல் நகா்மன்றக் கூட்டம் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகா்மன்ற தலைவா் கே.திருமலைசாமி தலைமை வகித்தாா். துணைத்தலைவா் ப.வெள்ளைச்சாமி, நகராட்சி ஆணையா் ப.தேவிகா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு பேசுகையில், ஒட்டன்சத்திரம் நகராட்சியை முதன்மை நகராட்சியாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றாா். அதனைத்தொடா்ந்து ஒட்டன்சத்திரம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ள ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வா், குப்பை கொட்டுவதற்கு 28 ஏக்கா் நிலம் வாங்கிக்கொடுத்த உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகராட்சி பகுதிகளில் உள்ள ஒடைகளை தூா்வாரி ஒடையின் இருபுறமும் கான்கிரீட் தளத்துடன் கூடிய தடுப்புச்சுவா் அமைத்தல், குடிநீா் விநியோகம் செய்ய 6 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட கழிவுநீா் உறிஞ்சு வாகனம் வாங்குதல், நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் சாலைகள், தெருக்கள்,நீா்நிலை பகுதிகள் மற்றும் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடங்களில் பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறை மூலம் நிலஅளவை செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் உள்ளிட்ட 14 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT