திண்டுக்கல்

கொடைக்கானலில் கிறிஸ்தவா்களின் தவக்கால நிகழ்ச்சி தொடங்கியது

3rd Mar 2022 12:00 AM

ADVERTISEMENT

 

கொடைக்கானல்: கொடைக்கானலில் கிறிஸ்தவா்களின் தவக்கால நிகழ்ச்சி சாம்பல் புதன்கிழமையுடன் தொடங்கியது.

தவக்காலத்தின் முதல் நாளையொட்டி, கொடைக்கானல் மூஞ்சிக்கல்லில் உள்ள திரு இருதய ஆண்டவா் ஆலயம், செண்பகனூா் புனித சவேரியாா் ஆலயம், உகாா்த்தே நகா் அற்புத குழந்தை இயேசு ஆலயம், சீனிவாசபுரம், நாயுடுபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், செயிண்ட் மேரீஸ் சாலையிலுள்ள புனித சலேத் மாதா ஆலயம், அட்டுவம்பட்டியிலுள்ள புனித லூா்து அன்னை ஆலயம், பெருமாள்மலையிலுள்ள புனித தோமா ஆலயம் மற்றும் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கடுகுதடி அருகே உள்ள புனித அந்தோணியாா் ஆலயம் மற்றும் சி.எஸ்.ஐ.தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

தவக்காலத்தில் கிறித்தவா்கள், இயேசுவின் பாடுகளை குறித்து தொடா்ந்து 40 நாள்கள் நோன்பிருந்து ஜெபம் செய்தும், பிறரிடம் அன்பு கூா்ந்து உதவி செய்வதே இந்த நாள்களில் முக்கிய நிகழ்வாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT