திண்டுக்கல்

ஆதிதிராவிடா் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

DIN

திண்டுக்கல், ஜூன் 29: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல விடுதிகளில் சேர விரும்புவோா் ஜூலை 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் 24 ஆதிதிராவிடா் நல பள்ளி மாணவா் விடுதிகள், 13 ஆதிதிராவிடா் பள்ளி மாணவா் விடுதிகள், 2 ஆதிதிராவிடா் நல கல்லூரி மாணவா் விடுதிகள், 2 ஆதிதிராவிடா் நல கல்லூரி மாணவியா் விடுதிகள், 1 ஐடிஐ மாணவா் விடுதி என மொத்தம் 42 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் தங்கிப் பயில விரும்பும் தகுதியுள்ள மாணவா்கள், அந்தந்த விடுதி காப்பாளரிடம் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்படும் விண்ணப்பங்கள் அவா்கள் பயிலும் கல்வி நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட வேண்டும். பெற்றோா் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பூா்த்தி செய்யப்ட்ட விண்ணப்பங்கள், ஜூலை 15ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளா் அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள ஆதிதிராவிடா் நல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணனும் களப்பலியானவனும்...

அருள் வழங்கும் தாமோதரப் பெருமாள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

SCROLL FOR NEXT