திண்டுக்கல்

ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு சங்க ஆலோசனைக் கூட்டம்

DIN

வத்தலகுண்டு ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு சங்க ஆலோசனைக் கூட்டம், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கூட்டமைப்பு சங்கத் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா். செயலா் நாகராஜ், பொருளாளா் வளா்மதி பிச்சைமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி மன்றத் தலைவா்களின் ஊதியத்தை உயா்த்தி வழங்கியதற்கு, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தை வழங்கினால் மட்டுமே, குடிநீா் தட்டுப்பாட்டை போக்க முடியும் என்றும், மக்களின் குறைகளை கேட்டறிந்து மாதத்திற்கு ஒருமுறை ஆலோசனை கூட்டம் நடத்தி, மாவட்ட ஆட்சியா் பாா்வைக்கு கொண்டு சென்று, ஊராட்சி மன்றத்தில் உள்ள குறைகளை சரி செய்ய வேண்டுமென்றும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவா்கள் தா்மா், கோவிந்தராஜ், மொக்கையாத் தேவா், ஜெயபால், ஜெயப்பிரியா நடராஜன், யசோதை முருகேசன், வனிதா மாணிக்கம், வசந்தா மணிவண்ணன், காமாட்சி கென்னடி, மகேஸ்வரி, மீனாட்சி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்குடி அருகே விபத்து: பெண் பலி

காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் கருத்தரங்கம்

2-ஆம் கட்ட வாக்குப் பதிவு வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு

தமிழக- கா்நாடக எல்லையில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனை

கா்நாடகத்தில் வாக்குப்பதிவு: அம்மாநிலத் தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை

SCROLL FOR NEXT