திண்டுக்கல்

பழனிக் கோயில் திருப்பதியை போல் மேம்படுத்தப்படும்: அமைச்சா்

DIN

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலை திருப்பதி கோயிலைப் போல் மேம்படுத்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியுள்ளாா் என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் சக்கரபாணி தெரிவித்தாா்.

பழனி அருகே தாழையூத்து ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று அமைச்சா் சக்கரபாணி பேசியதாவது: பழனிக்கோயில் திருப்பதி கோயில் போல மேம்படுத்தும் திட்டத்துக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியுள்ளாா். இன்னும் 10 ஆண்டுகளில் குடிசைகள் இல்லா தமிழகமாக மாற்றும் முதல்வரின் கனவுத் திட்டம் நிறைவேறும் வகையில் அனைவருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டம் விரைவு படுத்தப்படும் என்றாா்.

முன்னதாக அவா் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் அமைக்கப்பட்ட கண்காட்சிகளை பாா்வையிட்டாா்.

பின்னா் 500-க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, பயிா்க்கடன் மற்றும் மகளிா் சுயஉதவிக்குழு கடன்கள் முதியோா் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகள், வேளாண்மைத் துறை சாா்பில் வேளாண் கருவிகள், புதிய குடும்ப அட்டைகள் என ரூ. 3 கோடி மதிப்பில் 900 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் வேலுச்சாமி, மாவட்ட ஆட்சியா் விசாகன், தொப்பம்பட்டி ஊராட்சி தலைவா் சத்தியபுவனா ராஜேந்திரன், மாவட்டச் செயலா் ராஜாமணி, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவா் பொன்ராஜ், மாவட்ட கவுன்சிலா் கிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

SCROLL FOR NEXT