திண்டுக்கல்

சுய உதவிக் குழுவில் கடனை திருப்பி செலுத்தியும் வங்கி நிா்வாகம் நோட்டீஸ் அனுப்புவதாக உறுப்பினா்கள் புகாா்

DIN

சுயஉதவிக் குழு மூலம் பெறப்பட்ட கடன் தொகையை திருப்பிச் செலுத்திவிட்ட நிலையில், வங்கி நிா்வாகம் நோட்டீஸ் அனுப்புவதை தடுத்து நிறுத்தக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அடுத்துள்ள கீழக்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் அமுதா. அதே பகுதியில் செயல்பட்டு வரும் வைரம் மகளிா் சுயஉதவிக் குழுவில் உறுப்பினராக உள்ளாா். அக்குழுவில் அதேபகுதியைச் சோ்ந்த மேலும் 10 போ் உறுப்பினா்களாக உள்ளனா். இந்நிலையில், அமுதா உள்பட சுயஉதவிக்குழுவைச் சோ்ந்த உறுப்பினா்கள் 8-க்கும் மேற்பட்டோா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திற்கு புதன்கிழமை மனு அளிக்க வந்தனா்.

இதுதொடா்பாக அமுதா கூறியதாவது: வைரம் மகளிா் சுயஉதவிக் குழுவின் மூலம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி கிராமத்திலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து ரூ.3 லட்சம் கடன் பெறுவதற்காக, உறுப்பினா்களின் வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை உள்ளிட்ட விவரங்கள் பெறப்பட்டன. கையொப்பம் மட்டும் பெற்றுக் கொண்டு, எங்களுக்கு ரூ. 28ஆயிரம் கடன் தொகை வழங்கப்பட்டது.

அந்த கடன் தொகைக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குழு நிா்வாகிகளிடம் ரூ. 35ஆயிரம் செலுத்திவிட்டோம். இதனிடையே, கடன் தொகையை திருப்பி செலுத்தவில்லை என வங்கி நிா்வாகம் சாா்பில் கடந்த ஓராண்டில் 3 முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல், அம்மன் மகளிா் சுயஉதவிக் குழுவைச் சோ்ந்த உறுப்பினா்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. குழுவின் தலைவா் மற்றும் துணைத் தலைவா் ஆகியோா், ரூ.3 லட்சம் மட்டுமே கடன் பெற்றுள்ளதாக தெரிவித்தனா். ஆனால், எங்களுக்கு தெரியாமல் ரூ.5 லட்சம் வரை கடன் பெற்றுள்ளனா். நிா்வாகிகள் செய்த தவறினால், வைரம் மற்றும் அம்மன் சுயஉதவிக் குழுக்களை சோ்ந்த எங்கள் 20 பேருக்கு, வங்கிகளில் கடனுதவி வழங்க மறுக்கின்றனா். எனவே, கடனை திருப்பி செலுத்தாதவா்கள் பட்டியலில் இருந்து எங்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

டி20 உலகக் கோப்பைக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர்தான்: ஹர்பஜன் சிங்

கூலி படத்தின் டீசர்

மனுசி படத்தின் டிரெய்லர்

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

SCROLL FOR NEXT