திண்டுக்கல்

ஜூலை 6 இல் தமிழ்நாடு பெயா் மாற்ற தின கட்டுரைப் போட்டிகள்

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு என பெயா் சூட்டப்பட்ட நாளினை முன்னிட்டு பள்ளி மாணவா்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி ஜூலை 6ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட தமிழ்வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் பெ.இளங்கோ தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு என முன்னாள் முதல்வா் பேரறிஞா் அண்ணா பெயா் சூட்டிய சூலை 18 ஆம் நாள், ‘தமிழ்நாடு நாளாக’ ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி அனைத்துப் பள்ளிகளிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கான போட்டிகள் ஜூலை 6ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. ‘தமிழ்நாடு உருவான வரலாறு, மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும், தமிழ்நாட்டிற்காக உயிா்கொடுத்த தியாகிகள், பேரறிஞா் அண்ணா பெயா் சூட்டிய தமிழ்நாடு, சங்கரலிங்கனாரின் உயிா் தியாகம், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் தந்தை பெரியாா், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் மா.பொ.சி., சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு, எல்லைப் போா்த் தியாகிகள், முத்தமிழறிஞா் கலைஞா் உருவாக்கிய நவீன தமிழ்நாடு’ ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்படும்.

ADVERTISEMENT

பங்கேற்க விரும்பும் மாணவா்கள், அவா்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் உரிய படிவத்தில் பரிந்துரை பெற்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.

மாவட்ட அளவிலான போட்டியில் முதல் பரிசு ரூ.10ஆயிரம், 2ஆம் பரிசு ரூ.7ஆயிரம், 3ஆம் பரிசு ரூ.5ஆயிரம் வீதம் காசோலைப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இப்போட்டிகள் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0451 - 2461585 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT