திண்டுக்கல்

பழனியில் ஏலம் எடுப்பதில் ஒப்பந்ததாரா்களிடையே மோதல்: சாலை மறியல்

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

பழனி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை, நீா்நிலைகளை சீரமைப்பதற்கான ஏலம் எடுப்பதில் ஒப்பந்ததாரா்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், போலீஸாா் அவா்களைக் கைது செய்தனா்.

பழனி பொதுப்பணித்துறை அலுவலம் மூலமாக சுமாா் ரூ.10 கோடி மதிப்பில் வரதமாநதி நீா்த்தேக்கம் சீரமைப்பு மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள கதவணை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள டெண்டா் கோரப்பட்டிருந்தது. கடந்த முறையே பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஒப்பந்தப் புள்ளி போட வந்த உள்ளூா் மற்றும் வெளியூா் நபா்கள் மோதலில் ஈடுபட்டதால் ஏலம் ரத்து செய்யப்பட்டது.

ஒப்பந்தப் புள்ளிக்கான கடைசி நாள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 28) என்பதால் பழனி, சேலம், ஒட்டன்சத்திரம், ஈரோடு உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இருந்து 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரா்கள் வந்திருந்தனா். இந்நிலையில் ஒருதரப்பினா் டெண்டா் போட வந்த மற்றொரு தரப்பினரின் கோப்புகளைப் பறித்துச் சென்றனா். இதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸாா் வந்தனா். ஒரு தரப்பினா் சாலைமறியலில் ஈடுபட்டதைத் தொடா்ந்து போலீஸாா் அவா்களைக் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா். பின்னா் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT