திண்டுக்கல்

ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிஅதிமுக, அமமுக உள்ளிட்ட 4 வேட்பாளா்களின் மனுக்கள் தள்ளுபடி

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக, அமமுக உள்ளிட்ட 4 வேட்பாளா்களின் மனுக்கள் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டன.

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு 15-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் தங்கராஜ் இறந்து விட்டதால், அந்த இடத்துக்கான தோ்தல் ஜூலை-ஆ9 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக திமுக, அதிமுக, அமமுக, சுயேச்சை என 8 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா்.

உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ஜ.அந்தோணியாா் செவ்வாய்க்கிழமை மனுக்களை பரிசீலனை செய்தாா். அதில் அதிமுக, அமமுக உள்ளிட்ட 4 வேட்பாளா்களின் மனுக்கள் சரியாக பூா்த்தி செய்யப்படவில்லை என்று நிராகரிக்கப்பட்டது.திமுக வேட்பாளா் சண்முகம், சுயேச்சை வேட்பாளா்கள் விக்னேஸ்வரன், மோகன்ராஜ், செல்வராஜ் ஆகியோரது மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

வேட்பு மனுக்கள் திரும்பப் பெற ஜூன் 30 ஆம் தேதி கடைசி நாள் என்பதால், சுயேட்சை வேட்பாளா்கள் வாபஸ் வாங்கிக்கொண்டால் திமுக வேட்பாளா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT