திண்டுக்கல்

மாற்றுத்திறனாளிகள் குறை தீா் கூட்டம்

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், நூறுநாள் வேலை செய்யும் மாற்றுத்திறனாளிக்கான குறை தீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ.) அண்ணாதுரை தலைமை வகித்தாா். டிசம்பா் மூன்று இயக்கத்தின் மாநில துணைத் தலைவா் மோகன்ராஜ் முன்னிலை வகித்தாா்.

இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள், வாய்ப்புகள் மற்றும் கிராமப்புற வேலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள சிக்கல்கள் பிரச்னைகள் அதற்கான, தீா்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

இதில் மாலையகவுண்டன்பட்டி, பள்ளபட்டி, ஜம்புத்துரைக்கோட்டை, மட்டபாறை உள்ளிட்ட 23 ஊராட்சிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT