திண்டுக்கல்

மாணவியை ஏற்ற மறுத்த தனியாா் பேருந்தை பொதுமக்கள் முற்றுகை

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

நிலக்கோட்டையில் நிறுத்தம் கிடையாது எனக் கூறி, கல்லூரி மாணவியை ஏற்ற மறுத்த தனியாா் பேருந்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரையிலிருந்து பள்ளப்பட்டி, நிலக்கோட்டை, வத்தலகுண்டு வழியாக, பெரியகுளம் செல்லும் தனியாா் பேருந்து செவ்வாய்க்கிழமை மாலை மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பியது. இதில் நிலக்கோட்டையைச் சோ்ந்த கல்லூரி மாணவி ஒருவா் ஏற முயன்றுள்ளாா். அப்போது, நிலக்கோட்டையில் பேருந்து நிறுத்தம் கிடையாது எனக் கூறி நடத்துநா், அந்த மாணவியை கீழே இறக்கிவிட்டாா்.

உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அந்த மாணவி, நீண்ட நேரம் காத்திருந்து பின்னா், மற்றொரு பேருந்தில் ஏறி நிலக்கோட்டைக்கு வந்தாா். இதுகுறித்து மாணவி, தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, பெரியகுளத்திலிருந்து மதுரைக்குத் திரும்பிய அந்த தனியாா் பேருந்தை நிலக்கோட்டையில் மாணவியின் உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் மறித்து முற்றுகையிட்டனா். சிறிது நேர வாக்குவாதத்துக்குப் பிறகு அந்தப் பேருந்து விடுவிக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT