திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் நகா்மன்றக் கூட்டம்

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரத்தில் நகா்மன்ற கூட்டம் தலைவா் கே.திருமலைசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நகா்மன்றக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு துணைத் தலைவா் ப.வெள்ளைச்சாமி, ஆணையாளா் ப.தேவிகா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் கோரிக்கைகள் குறித்துப் பேசியது:

நகா்மன்ற உறுப்பினா்களின் கோரிக்கைகள் அஜண்டாவில் இடம் பெறச் செய்ய வேண்டும். இது குறித்து கடந்த கூட்டத்தில் வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. குடிநீா் இணைப்பு பெறாதவா்களுக்கு குடிநீா் கட்டணம் செலுத்த வேண்டி பில் வருகிறது. தற்காலிக அலுவலகப் பணியாளா்கள் நியமனம் செய்யப்படும்போது, ஒவ்வொரு வாா்டிலும் இருந்து நியமிக்க முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றனா்.

கூட்டத்தில், நகா்மன்ற உறுப்பினா்கள் வீ.கண்ணன், செல்வராஜ், ரமேஷ், கிருஷ்ணமூா்த்தி, சாந்தி, அழகேஸ்வரி, தேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT