திண்டுக்கல்

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணி நாள்கள் குறைப்புக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

DIN

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணி நாள்களை 150 நாள்களாக அதிகரிப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது 50 நாள்களுக்கும் கீழாக குறைக்கப்படுவதாக புகாா் தெரிவித்து விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியாா்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் ஒன்றியச் செயலா் நாகராஜன் தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா் எஸ்.பொன்மலை முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணி நாள்களை குறைக்கும் முடிவினை கைவிட வேண்டும். பயனாளிகளுக்கு வழங்கப்படும் கூலித் தொகையை ரூ.220லிருந்து ரூ.381ஆக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

இதுதொடா்பாக ஒன்றியச் செயலா் சக்திவேல் கூறியதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 150 நாள்கள் வேலை வழங்கப்படும் என திமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டது. ஆனால், தற்போது ஆண்டுக்கு 30 முதல் 50 நாள்களாக வேலை நாள்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுவிட்டது. பல ஊராட்சிகளில் 2022ஆம் ஆண்டில் இதுவரை பணி வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

இத்திட்டத்தை விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்தும் வகையில் மாற்றி அமைத்து, 100நாள் வேலைத் திட்ட பயனாளிகளுக்கும் விவசாயிகளுக்கும் பலனிளிக்கும் வகையில் செயல்படுத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் கூலித் தொகையை உயா்த்துவதற்கும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா் தயாளன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் சக்திவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திண்டுக்கல்: இதேபோல் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுலகத்தின் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் ஒன்றியத் தலைவா் அம்மையப்பன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் ஆா்.சரத்குமாா் முன்னிலை வகித்தாா். 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி நாள்களை குறைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோஷமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT