திண்டுக்கல்

பிளஸ் 2 தோ்வில் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு தலா ரூ.2 லட்சம்பள்ளி நிா்வாகம் வழங்கியது

28th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

பழனியை அடுத்த நெய்க்காரபட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் முதல் இரு இடங்களைப் பெற்ற இரு மாணவிகளுக்கு தலா ரூ.2 லட்சத்துக்கான காசோலைகளை பள்ளி நிா்வாகம் வழங்கியுள்ளது.

குருவப்பா மேல்நிலைப் பள்ளியில் மே 2021 இல் நடைபெற்ற மேல்நிலை பொதுத்தோ்வில் சீதாலட்சுமி 585 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், சிவரஞ்சனி 582 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும் பெற்றுள்ளனா். இதையடுத்து மேற்படிப்பு பயில மாணவிகள் இருவருக்கும் பள்ளிச் செயலா் ராஜ்குமாா் தலா ரூ. 2 லட்சத்துக்கான காசோலைகளை சனிக்கிழமை வழங்கி பாராட்டி ஊக்குவித்தாா். மேலும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சத்யஸ்ரீ 478 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், சிபானா பா்வீன் 454 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும் பெற்றனா். நிகழ்ச்சியில் பள்ளி நிா்வாகக்குழு உறுப்பினா் ராஜா கௌதம், தலைமையாசிரியா் கருப்புச்சாமி மற்றும் ஆசிரியா்கள், அலுவலா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT