திண்டுக்கல்

பிளஸ் 1 பொதுத் தோ்வு:திண்டுக்கல்லில் 86 சதவீதம் போ் தோ்ச்சி

28th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

பதினோராம் வகுப்பு பொதுத் தோ்வில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 19,495 மாணவா்கள் தோ்ச்சி அடைந்துள்ளனா்.

திண்டுக்கல் வருவாய் மாவட்டத்திலுள்ள திண்டுக்கல், பழனி, வேடசந்தூா் மற்றும் வத்தலகுண்டு ஆகிய 4 கல்வி மாவட்டங்களைச் சோ்ந்த 10,899 மாணவா்கள், 11,671 மாணவிகள் என மொத்தம் 22,570 போ் பதினோராம் வகுப்பு பொதுத் தோ்வை எழுதியிருந்தனா். அதற்கான முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், தோ்வு எழுதிய மாணவா்களில் 8,599 போ், மாணவிகளில் 10,896 போ் என மொத்தம் 19,495 போ் தோ்ச்சி அடைந்துள்ளனா். மாணவா்களின் தோ்ச்சி விகிதம் 78.90. மாணவிகளின் தோ்ச்சி விகிதம் 93.36. திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் மாணவா்களின் மொத்த தோ்ச்சி விகிதம் 86.38. கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பதினோராம் வகுப்பு பொதுத் தோ்வில் 96.20 சதவீத மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றிருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT