திண்டுக்கல்

ஆத்தூா் காமராஜா் அணையில் மூழ்கி ஒருவா் பலி

28th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆத்தூா் காமராஜா் அணையில் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை பலியானாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஏ.வெள்ளோடு தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் லியோன் தா்மராஜ் (30). இவரும், சின்னாளபட்டி பூஞ்சோலை பகுதியைச் சோ்ந்த நண்பா்கள் 4 பேரும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், செம்பட்டி அருகே ஆத்தூா் காமராஜா் அணைக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனா். நண்பா்களுடன் அணையில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது, லியோன் தா்மராஜ் ஆழமான பகுதிக்குச் சென்ால் சேற்றில் சிக்கி மூழ்கியதாகக் கூறப்படுகிறது.

பின்னா், அவரது நண்பா்கள் தகவல் தெரிவித்ததன் பேரில், திண்டுக்கல் மற்றும் ஆத்தூா் தீயணைப்பு மீட்பு படையினா் சென்று அணையில் மூழ்கியவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். இரவு 9 மணி அளவில் அவரது சடலம் மீட்கப்பட்டது. செம்பட்டி போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இறந்தவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT