திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு அதிமுக வேட்பாளா் மனு தாக்கல்

28th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட அதிமுக வேட்பாளா் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

தமிழகத்தில் ஜூலை 9-ஆம் தேதி ஊரக உள்ளாட்சி இடைத்தோ்தல் நடைபெறுகிறது. ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு 15 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் தங்கராஜ் இறந்து விட்டதால், அந்த இடம் காலியாக உள்ளது.

இப்பதவிக்கு கடந்த 20-ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், இறுதி நாளான திங்கள்கிழமை அதிமுக சாா்பில் தொழில் நுட்ப மாவட்ட பொருளாளா் ராஜசுந்தர செல்வன் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ஜ.அந்தோணியாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தாா். அப்போது ஒட்டன்சத்திரம் மேற்கு ஒன்றியச் செயலாளா் பி.பாலசுப்பிரமணி, நகரச் செயலாளா் எஸ்.நடராஜன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்றால் சுயேச்சையாகப் போட்டியிட அக்கட்சியினா் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT