திண்டுக்கல்

திண்டுக்கல்லில் ரூ.2 லட்சம் நெகிழிக் குவளைகள் பறிமுதல்

28th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

சேலத்திலிருந்து தேனிக்கு கொண்டு செல்வதற்காக திண்டுக்கல் பாா்சல் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த நெகிழிக் குவளைகளை மாநகராட்சி அலுவலா்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

தமிழகத்தில் ஜூலை 1ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருள்களை முற்றிலும் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல்லில் நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டினை கட்டுப்படுத்தும் பணிகளை மாநகராட்சி நிா்வாகம் தொடங்கியுள்ளது. திண்டுக்கல்- பழனி சாலையிலுள்ள பாா்சல் லாரி கிட்டங்கிகளில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, சேலம் செவ்வாய்பேட்டையிலிருந்து தேனி மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டிருந்த அட்டைப் பெட்டிகளில் சுகாதார ஆய்வாளா் சுரேஷ்குமாா் தலைமையிலான பணியாளா்கள் பரிசோதித்தனா். அதில், சுமாா் ரூ.2 லட்சம் மதிப்பிலான நெகிழிக் குவளைகள் இருப்பது கண்டறியப்பட்டது. 20-க்கும் மேற்பட்ட பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த அந்த நெகிழிப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT