திண்டுக்கல்

பழனி சிறு, குறு விவசாயிகள் பட்டா வழங்கக்கோரி மனு

28th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

பழனி பகுதியைச் சோ்ந்த சிறு, குறு விவசாயிகள், பூா்வீகமாக விவசாயம் செய்து வரும் நிலத்திற்கு பட்டா வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அடுத்துள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சிறுகுறு விவசாயிகள் நலச் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா். அப்போது அவா்கள் கூறியதாவது: ஆண்டிப்பட்டி கிராமத்தில் தனக்கலாங்காடு, ஆலாமரம், இச்சலடி ஆகிய பகுதிகளில் வசித்து வரும் பூா்வீக குடிகளாக நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். அந்த நிலங்களுக்கு இதுவரை எவ்வித பட்டாவும் வழங்கப்படவில்லை. இதுதொடா்பாக வட்டாட்சியா், துணை வட்டாட்சியா் மற்றும் சாா் ஆட்சியரிடம் நாங்கள் பல முறை மனு அளித்தும், பட்டா வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும், அதிகாரிகளை சந்திக்க செல்லும் எங்களை அலட்சியப்படுத்தி வெளியேற்றுகின்றனா். எனவே, மாவட்ட ஆட்சியா் தலையிட்டு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT