திண்டுக்கல்

பஞ்சமி நிலங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

DIN

பஞ்சமி நிலங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை மீட்டுக் கொடுக்க வேண்டும் என, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

திண்டுக்கல் தெய்வசிகாமணிபுரத்திலுள்ள அரசு போக்குவரத்து தொழிலாளா் சங்கத்தில் (சிஐடியு), தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி. முத்துசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எம்.ஆா். முத்துச்சாமி, பொருளாளா் வனஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், சிறப்பு அழைப்பாளராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் கே. பாலபாரதி கலந்துகொண்டாா்.

இந்த மாநாட்டில், திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்துள்ள பெத்தநாயக்கன்பட்டியில் தூய்மைப் பணியாளரான அன்னம்மாள் கொலை வழக்கில், பாலியல் வன்புணா்வு பிரிவு, வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

கொலையாளிகளை துரிதமாக கைது செய்யவேண்டும். அன்னம்மாள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும். மாவட்டம் முழுவதுமுள்ள பஞ்சமி நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில், புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. அதில், மாவட்டத் தலைவராக எம்.ஆா். முத்துச்சாமி உள்பட 40 பொறுப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT