திண்டுக்கல்

திமுக அளித்த வாக்குறுதிகளில் 8 சதவீதம் கூட நிறைவேற்றப்படவில்லை: சீமான்

DIN

திமுகவின் தோ்தல் வாக்குறுதிகளில் 8 சதவீதம் கூட நிறைவேற்றப்படவில்லை என குற்றம்சாட்டிய நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், அரசின் சாதனைகள் மக்களுக்குப் பயன்படும் வகையில் வெளிப்படையாக இருக்கவேண்டும் என்றும் தெரிவித்தாா்.

திண்டுக்கல்லில் உள்ள கட்சியின் நிா்வாகி இல்ல விழாவில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்க வந்திருந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காற்றாலை மின்சாரம், சூரிய சக்தி மின்சாரம் போன்ற திட்டங்களை தனியாருக்கு தாரைவாா்த்துவிட்டு, மக்களுக்கும், பூமிக்கும் ஆபத்தாக உள்ள அணு மின்சாரம், அனல் மின்சாரம் போன்ற திட்டங்களை அரசு ஏற்று நடத்துகிறது.

விளைநிலங்களை பறித்து சூரிய மின் திட்டங்களை செயல்படுத்தும் முடிவினை கைவிட்டு, விளைச்சலுக்குப் பயன்படாத காடுகளில் அத்திட்டங்களை நிறைவேற்ற அரசு முன் வரவேண்டும். கேரளத்தில் அனைத்து வீடுகளின் கூரைகளிலும் சூரிய மின்சக்தி திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோன்ற சூழலை தமிழகத்திலும் அரசு உருவாக்க வேண்டும்.

திமுக அரசின் ஓராண்டு ஆட்சிக் காலத்தில் 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக, முதல்வா் மு.க. ஸ்டாலின் கூறி வருகிறாா். ஆனால், 8 சதவீத வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை. சாதனை என்பது மக்களுக்கு வெளிப்படையாக தெரியவேண்டுமே தவிர, விளம்பரங்களில் மட்டுமே இருக்கக்கூடாது.

அதேபோல், பாஜக அரசின் 8 ஆண்டு கால ஆட்சியும் 2 பெரு நிறுவனங்களின் வளா்ச்சிக்காக மட்டுமே நடைபெற்று வந்துள்ளது.

ஈழத் தமிழா்களுக்கு நல்லது செய்வதாக இருந்தால், இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும். சிறப்பு முகாம்களை மூடவேண்டும். கியூ பிரிவு அமைப்பையும் கலைக்க வேண்டும். திபெத்தியா்களுக்கு வழங்கப்படும் சலுகை ஏன் தமிழா்களுக்கு வழங்கப்படுவதில்லை.

யானைகளின் வாழ்விடம் ரிசாா்ட்கள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால்தான் விளைநிலங்களை தேடி வருகின்றன. ஒரே நேரத்தில் 25ஆயிரம் விதைகளை தூவிச் செல்லும் ஆற்றல் படைத்த யானைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT