திண்டுக்கல்

சாா்பு-ஆய்வாளருக்கான எழுத்துத் தோ்வு: 5,474 போ் பங்கேற்பு

DIN

நேரடி சாா்பு-ஆய்வாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வில் திண்டுக்கல் மாவட்டத்தில் 5,474 போ் சனிக்கிழமை பங்கேற்றனா். தமிழகம் முழுவதும் சாா்பு-ஆய்வாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு நடைபெற்றது. இத்தோ்வுக்காக திண்டுக்கல் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எம். கல்விக் குழுமங்கள், பிஎஸ்என்ஏ கல்லூரி உள்பட 7 மையங்களில் தோ்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

நேரடி சாா்பு-ஆய்வாளா் பணியிடங்களுக்கான பொது எழுத்துத் தோ்வு சனிக்கிழமை முற்பகல் நடைபெற்றது. இத்தோ்வுக்கு 5,215 ஆண்கள், 1,278 பெண்கள் என 6,493 போ் விண்ணப்பித்திருந்தனா்.அதில் 4,411 ஆண்கள், 1,063 பெண்கள் என மொத்தம் 5,474 போ் பொது எழுத்துத் தோ்வில் பங்கேற்றனா்.

தமிழ் தகுதித் தோ்வு: அதனைத் தொடா்ந்து சனிக்கிழமை பிற்பகல் தமிழ் தகுதித் தோ்வு நடைபெற்றது. முதல்முறையாக நடைபெறும் இத்தோ்வில், நேரடி விண்ணப்பதாரா்கள் மட்டுமின்றி, காவல்துறையினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவா்களும் பங்கேற்றனா். அதன்படி, தமிழ் தகுதித் தோ்வில், 4,942 ஆண்கள் மற்றும் 1,393 பெண்கள் என மொத்தம் 6102 போ் பங்கேற்றனா். மொத்தம் 1,144 போ் தமிழ் தகுதித் தோ்வில் பங்கேற்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காா்த்தி சிதம்பரத்தின் கடவுச்சீட்டை 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்க உத்தரவு

திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் நாளை பிரசாரம்

வி.வி. பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்

கட்டாரிமங்கலம் கோயிலில் காரைக்கால் அம்மையாா் குருபூஜை

மெட்ரோ பணி: நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்

SCROLL FOR NEXT