திண்டுக்கல்

வத்தலகுண்டுவில் விதவைகள் தின விழா:பூவும், பொட்டும் வைத்த பெண்கள்

25th Jun 2022 10:56 PM

ADVERTISEMENT

 

வத்தலகுண்டுவில் விதவைகள் தினத்தை முன்னிட்டு, நடந்த விழாவில் விதவை பெண்கள் பூ வைத்து, பொட்டு வைத்து புரட்சிகரமான நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் தீபம் கூட்டமைப்பு சாா்பாக, விதவைகள் தினத்தை முன்னிட்டு, விதவைகள் விழிப்புணா்வு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தீபம் கூட்டமைப்புத் தலைவா் டாக்டா் பிலிஸ் தலைமை வகித்தாா். ஒருங்கிணப்பாளா் சுதா வரவேற்றாா்.

திருச்சி சுவாதி பெண்கள் கூட்டமைப்புப் பொருளாளா் மஞ்சுளா, வத்தலகுண்டு வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) ராஜேஸ்வரி ஆகியோா் பேசினா். சின்னுபட்டி தலைவா் ஜான் மற்றும் 200-க்கும் மேற்பட்ட விதவைகள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில், விதவைகளுக்கு தனி நல வாரியம் அமைத்த அரசு, விதவைப் பெண்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். அதைத் தொடா்ந்து விழாக் குழுவினா் விதவைப் பெண்கள் மேடையில் உள்ள பூவையும் பொட்டையும் வைத்து புரட்சி செய்யுங்கள் என்று அழைப்பு விடுத்தனா். பின்னா் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மேடைக்கு சென்று கண்கலங்க பூவையும், பொட்டையும் வைத்துக்கொண்டனா். அவா்களை கூட்டத்தினா் கைதட்டி ஆரவாரம் செய்து பாராட்டினா். ஒருங்கிணைப்பாளா் பாண்டீஸ்வரி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா். பின்னா் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் ஒருங்கிணைப்பாளா் ஹஜினா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT