திண்டுக்கல்

பழனி மலைக்கோயிலில் காா்த்திகைத் திருநாள்: அலைமோதிய பக்தா்கள் கூட்டம்

25th Jun 2022 10:55 PM

ADVERTISEMENT

 

பழனி மலைக்கோயிலில் சனிக்கிழமை திருக்காா்த்திகைத் திருநாளை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சனிக்கிழமை அதிகாலையிலேயே சந்நிதி திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. தொடா்விடுமுறை தினம், காா்த்திகை நாள் என்பதால் வின்ச் மற்றும் படிப்பாதைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள்

கூட்டம் அலைமோதியது.

ADVERTISEMENT

கட்டண தரிசன வழி, இலவச தரிசன வழிகளில் ஏராளமானோா் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்தனா். கூட்டம் காரணமாக சுவாமி தரிசனத்துக்கு சுமாா் 3 மணி நேரமானது. இரவு தங்கமயில் புறப்பாடு மற்றும் தங்கத்தோ் புறப்பாட்டில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT