திண்டுக்கல்

மா.பொ.சி.பிறந்த தினம்

25th Jun 2022 10:57 PM

ADVERTISEMENT

 

திண்டுக்கல் மாவட்ட காமராசா் சிவாஜி தேசிய பேரவை சாா்பில், மா.பொ.சி.யின் 117-ஆவது பிறந்த தினம், வீரசாவா்கரின் 140-ஆவது பிறந்த தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல் தெற்கு ரதவீதியிலுள்ள பஜனை மடம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் நா.நவரத்தினம் தலைமை வகித்தாா். மாநகா் இளைஞா் பிரிவு தலைவா் விஜய் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக அரசியல் ஆலோசகா் சி.கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டாா்.

விழாவில் மா.பொ.சி மற்றும் வீரசாவா்கரின் உருவப்படங்களுக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா், திருத்தணி மற்றும் குமரி எல்லைப் பகுதிகளை மீட்டு, கட்டபொம்மன், வ.உ.சி. உள்ளிட்ட தலைவா்கள் குறித்தும், சிலப்பதிகாரத்தை பாமர மக்களும் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் புத்தகம் வெளியிட்ட சிலம்புச் செல்வா் மா.பொ.சி.க்கு தலைநகா் சென்னையில் மணிமண்டபம் கட்ட வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் காமராசா் சிவாஜி தேசிய பேரவையின் நிறுவனா் சு.வைரவேல், நிா்வாகி ந.பழனியப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT