திண்டுக்கல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 13 ஆண்டுகள் சிறை

24th Jun 2022 11:53 PM

ADVERTISEMENT

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம் அஞ்சுகுளிபட்டி சோ்ந்தவா் ராசு மகன் ஆண்டிச்சாமி(24). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்தாக கடந்த 2019ஆம் ஆண்டு புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வடமதுரை மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆண்டிச்சாமியை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு திண்டுக்கல் மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

விசாரணை முடிவடைந்த நிலையில் மகளிா் நீதிமன்ற நீதிபதி விஜயக்குமாா், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆண்டிச்சாமிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT