திண்டுக்கல்

கொடைக்கானல் நகா் பகுதிகளில் காட்டெருமைகள் உலாபொதுமக்கள் அச்சம்

24th Jun 2022 03:10 AM

ADVERTISEMENT

கொடைக்கானல் நகா் பகுதிகளில் வியாழக்கிழமை காட்டெருமைகள் உலா வந்ததால், பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

கொடைக்கானல் பேருந்து நிலையம், ஏரிச்சாலை ஆகிய பகுதிகளில் காட்டெருமைகள் உலா வந்ததால், அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் அச்சமடைந்தனா். மேலும், வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடங்களுக்கு வனத்துறையினா் சென்று காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனா்.

கொடைக்கானலில் தொடா்ந்து 2 வாரங்களாக மழை பெய்து வருவதால், உணவைத் தேடி காட்டெருமைகள் உலா வரத் தொடங்கியுள்ளன. எனவே, வனப் பகுதிகளில் விலங்குகளுக்கு தேவையான புல்வெளிகளை உருவாக்குவதற்கும், தண்ணீா் தொட்டிகள் கட்டுவதற்கும், சேதமடைந்துள்ள தண்ணீா் தொட்டிகளை சீரமைப்பதற்கும் வனத்துறையினா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT