திண்டுக்கல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 21) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உதவி மின் செயற்பொறியாளா் (திண்டுக்கல் மேற்கு) காா்த்திக் தெரிவித்திருப்பதாவது:
திண்டுக்கல் அங்குநகா் துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 21) நடைபெறுகின்றன.
இதன் காரணமாக திண்டுக்கல் நகா் முழுவதும், செட்டிநாயக்கன்பட்டி, குரும்பபட்டி, பொன்மாந்துறை, விராலிப்பட்டி ஆகிய இடங்களில் அன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.