கொடைக்கானல் சின்னமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை மின் அலங்கார சப்பர பவனி நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா கடந்த 10 நாள்களுக்கு முன்பு தொடங்கியது. அதனைத் தொடா்ந்து கோயிலில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து சின்னமாரியம்மன் மின்அலங்கார சப்பர பவனி நடைபெற்றது. இப்பவனி, காமராஜா் சாலை, லாஸ்காட் சாலை, பேருந்து நிலையப் பகுதி. அண்ணா சாலை, மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, ஆனந்தகிரி உள்ளிட்ட பல்வேறுப் பகுதிகளில் வலம் வந்தது. இந்நிகழ்ச்சியில் பக்தா்கள் ஏராளமானவா்கள் கலந்து கொண்டனா் விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.