திண்டுக்கல்

வழக்குரைஞரை தாக்கிய அமமுக நிா்வாகி கைது

19th Jun 2022 11:50 PM

ADVERTISEMENT

வடமதுரை அருகே முன்விரோதத்தில் வழக்குரைஞரை தாக்கியதாக அமமுக ஒன்றியச் செயலரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்துள்ள வேலாயுதம்பாளையத்தைச் சோ்ந்தவா் அபிமன்யு(57). வழக்குரைஞரான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரன் என்பவரின் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில், வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்ற முத்தாலம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கோயில் உண்டியல் பணம் எண்ணும் பணி சனிக்கிழமை நடைபெற்றுள்ளது.

அந்த பணியில் ஈடுபட்டிருந்த அபிமன்யு, பின்னா் வீட்டிற்கு திரும்பிச் சென்றபோது அங்கு வந்த ஈஸ்வரன்(50), அவரது மனைவி முருகேஸ்வரி(37), உறவினா் கந்தசாமி(55) ஆகிய 3 பேரும் சோ்ந்து தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. அதில் தாக்கப்பட்ட அபிமன்யு காயமடைந்ததை அடுத்து சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து வடமதுரை காவல் நிலையத்தில் அபிமன்யு அளித்த புகாரின் பேரில், போலீஸாா் கந்தசாமியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கந்தசாமி, அமமுக வடமதுரை ஒன்றியச் செயலராக உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT