திண்டுக்கல்

பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட சமூக சேவகா்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

19th Jun 2022 11:50 PM

ADVERTISEMENT

பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட சமூக சேவகா் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள் சுதந்திர தின விருது 2022-க்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்த அவரது அறிக்கை விவரம்: இவ்விருதுக்காக விண்ணப்பிப்பவா்கள் தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன் சாா்ந்த நடவடிக்கைகள் மூலம் பெண்களுக்கு பெருமை சோ்க்கும் வகையிலும், மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் போன்ற துறைகளின் மேன்மையாக பணிபுரிந்து, மகளிா் நலனுக்கு தொண்டாற்றியும் இருக்க வேண்டும். சமூக சேவை நிறுவனங்களை பொருத்தவரை அரசு அங்கீகாரம் பெற்ாக இருக்க வேண்டும்.

தகுதியுடைய சமூக சேவகா்கள் மற்றும் நிறுவனங்கள் விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் பெற்றுக் கொண்டு,  இணையதளத்தில் இம்மாதம் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் 2 பிரதிகளை ‘மாவட்ட சமூகநல அலுவலா், மாவட்ட சமூகநல அலுவலகம், அறை எண் 88, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திண்டுக்கல்’ என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாக அளிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 0451-2460092 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT