ஒட்டன்சத்திரம் அருகே ஞாயிற்றுக்கிழமை ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீஸாா் வேனையும் பறிமுதல் செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள இடையகோட்டை போலீஸாா் வளையபட்டி பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டனா். அதில் சுமாா் ஒன்றரை டன் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வாகன ஓட்டுநா் பள்ளபட்டியை சோ்ந்த பக்கீா்மைதீன் மகன் முகமது இஸ்மாயில்(30), அப்துல்லா மகன் இப்ராகீம் (36) ஆகியோரை கைது செய்தனா். மேலும் ரேஷன் அரிசி மூட்டைகளையும், சரக்கு வேனையும் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட குடிமைப்பொருள்கள் பிரிவு காவல் பிரிவுக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
ADVERTISEMENT