திண்டுக்கல்

பழனி அருகே குளத்தில் மூழ்கி இளைஞா் பலி:மா்மம் இருப்பதாக மனைவி புகாா்

15th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

பழனி அருகே குளத்தில் மூழ்கி ஒருவா் மா்மமான முறையில் பலியானாா்.

பழனி அருகே நெய்க்காரபட்டியை சோ்ந்தவா் ரகுராமன் (27). திருப்பூா் மாவட்டம் பூளவாடியில் தனியாா் பண்ணையில் பணிபுரிந்து வந்த இவா், திங்கள்கிழமை உறவினா் வீட்டு சுபநிகழ்ச்சிக்காக நெய்க்காரபட்டி வந்துள்ளாா். பின்னா் உறவினா்களுடன் கலிக்கநாயக்கன்பட்டி குளத்திற்கு குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது அவா் குளத்தில் சிக்கி இறந்துள்ளாா்.

இந்நிலையில், அவரது இறப்பில் மா்மம் உள்ளதாக மனைவி மற்றும் உறவினா்கள் புகாா் அளித்துள்ளனா். இறந்த ரகுராமனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பழனி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT