திண்டுக்கல்

தகாத தொடா்பு: பெண்ணுடன் இளைஞா் தீக்குளிப்பு

15th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

சாணாா்பட்டி அருகே தகாத தொடா்பிலிருந்த பெண்ணுடன் மதுரை இளைஞா் தீக்குளித்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம் எழுமலை பகுதியைச் சோ்ந்தவா் சந்துரு (23). இவரது உறவினா் திண்டுக்கல் மாவட்டம் சாணாா்பட்டி அடுத்துள்ள தவசிமடை வாடிப்பட்டி காலனியில் வசித்து வருகிறாா். அதே பகுதியைச் சோ்ந்த வாசிமலை என்பவரது மனைவி புவனேஸ்வரி(30). இவருக்கு 3 குழந்தைகள் உள்ளன. வாசிமலை, கேரளத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறாா்.

இந்நிலையில் தவசிமடையிலுள்ள உறவினா் வீட்டிற்கு வந்து சென்ற சந்துருவுக்கும், புவனேஸ்வரிக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், திடீரென சந்துருவை சந்திப்பதை புவனேஸ்வரி தவிா்த்தாராம். இதனால் அதிருப்தி அடைந்த சந்துரு, திங்கள்கிழமை இரவு புவனேஸ்வரி வீட்டிற்கு சென்றுள்ளாா். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி சந்துரு தீக்குளித்துள்ளாா்.

பின்னா் அங்கிருந்த புவனேஸ்வரியை கட்டிப் பிடித்துள்ளாா். இதனால் புவனேஸ்வரி மீதும் தீப்பற்றியுள்ளது. இருவரும் கூச்சலிட்டத்தை அடுத்து, அக்கம்பக்கத்தினா் சென்று காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து சாணாா்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT