ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே மனைவியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கொசவபட்டியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (55), பனை மரம் ஏறும் தொழில் செய்து வருகிறாா். இவரது மனைவி விஜயலட்சுமி (50). இவா்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா். கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வியாழக்கிழமை மாலை இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆறுமுகம் அரிவாளால் விஜயலட்சமியை வெட்டிக்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அம்பிளிக்கை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.