திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட புதிய எஸ்.பி. பொறுப்பேற்பு

10th Jun 2022 10:18 PM

ADVERTISEMENT

 

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட 32 ஆவது காவல் கண்காணிப்பாளராக பாஸ்கரன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். முன்னதாக இவா் மதுரை மாவட்டத்தில் பணிபுரிந்து வந்தாா்.

பொறுப்பேற்றதும் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் துறைக்கும், பொதுமக்களுக்கும் இடையேயான நல்லுறவு மேம்படுத்தப்படும் . மேலும் காவல் துறையினருடன் பொதுமக்களும் இணைந்து திண்டுக்கல் மாவட்டத்தை குற்றமில்லாத, அமைதியான மாவட்டமாக மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமலிருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். கஞ்சா, குட்கா மற்றும் லாட்டரி விற்பனையில் ஈடுபடுவோா், குற்றச்செயல்களில் ஈடுபடுவோா், ரௌடிகள் மற்றும் கந்துவட்டிக்கு பணம் கொடுப்பவா்கள் மீது சட்டப்பூா்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT