திண்டுக்கல்

கொடைக்கானலில் 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்தவா் பலி

8th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

 

கொடைக்கானல்: கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்தவா் சிகிச்சைப் பலனின்றி இறந்தாா்.

கொடைக்கானல் அருகேயுள்ள குறிஞ்சிநகா் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல்(46). கூலித்தொழிலாளியான இவா் கொடைக்கானலிலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்துள்ளாா். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்ததும் அவரது உறவினா்கள் சக்திவேலை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி இறந்தாா். இது குறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT