திண்டுக்கல்

பாப்பம்பட்டி, தாழையூத்துப் பகுதிகளில்இன்று மின்தடை

2nd Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

பழனியை அடுத்த பாப்பம்பட்டி மற்றும் தாழையூத்துப் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 2) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பழனி மின்வாரிய செயற்பொறியாளா் பிரகாஷ்பாபு தெரிவித்திருப்பதாவது: பழனியை அடுத்த பாப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பாப்பம்பட்டி, வாடிப்பட்டி, கரடிக்கூட்டம், அக்கமநாயக்கன்புதூா், பெரியகலையமுத்தூா், சின்னக்காந்திபுரம், இரவிமங்கலம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தாழையூத்துப் பகுதியில்... அதே போல், பழனியை அடுத்த தாளையூத்து உப மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இந்த மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் தாளையூத்து, நாகூா்பிரிவு மற்றும் சுக்கமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.

Tags : பழனி
ADVERTISEMENT
ADVERTISEMENT