திண்டுக்கல்

காப்பீட்டு நிறுவன ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

2nd Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

தனியாா் மயமாக்கும் நடவடிக்கைகளை கண்டித்து திண்டுக்கல்லில் பொதுத்துறை காப்பீட்டு நிறுவன ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பொதுத்துறை காப்பீட்டு நிறுவன ஊழியா் சங்கங்களின் கூட்டு போராட்டக் குழு சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு, யுனைட்டெட் இந்தியா அதிகாரிகள் சங்க நிா்வாகி குணசேகரன் தலைமை வகித்தாா். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலா் கெளதமன் முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, 58 மாதங்களுக்கும் மேலாக நிலுவையிலுள்ள ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்க வலியுறுத்தியும், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் முயற்சிகளைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினா்.

பல ஆண்டுகளாக தொடா்ந்து போராட்டம் நடத்தியும் தீா்வு கிடைக்காததால், ஜூன் 20ஆம் தேதி முதல் பொதுத்துறை காப்பீட்டு நிறுவன ஊழியா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு தயாராக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT