திண்டுக்கல்

இந்து மக்கள் கட்சி நிா்வாகி கைது:குடும்பத்தினா் தீக்குளிக்க முயற்சி

2nd Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

இந்து மக்கள் கட்சி நிா்வாகி மீது போலீஸாா் பொய் வழக்குப் பதிவு செய்வதாகக் கூறி, புதன்கிழமை அவரது குழந்தைகள், மனைவி மற்றும் பெற்றோா் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா்.

திண்டுக்கல் பொன்மாந்துரை புதுப்பட்டியைச் சோ்ந்தவா் ம. மாசானம் (33). இவா், இந்து மக்கள் கட்சியின் மாவட்ட பொதுச் செயலராக உள்ளாா். அதே பகுதியிலுள்ள குளத்தில் மீன் குத்தகை எடுத்து நடத்தி வருகிறாா். இவா் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையிலுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மாசானத்தின் வீட்டிற்கு சென்ற திண்டுக்கல் தாலுகா போலீஸாா் விசாரணைக்காக அவரை அழைத்துச் சென்ாக கூறப்படுகிறது. ஆனாலும், புதன்கிழமை காலை வரை அவா் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினா், திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு புதன்கிழமை சென்று விசாரித்தனா். அப்போது வழக்கு ஒன்றில் அவா் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த மாசானத்தின் தந்தை மருதை (55), தாய் ராசாத்தி (50), மனைவி காயத்ரி (30), 3 மகள்கள் ஆகியோா் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் முகாம் அலுவலகம் அருகே புதன்கிழமை பிற்பகலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா். இதனை அடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் மண்ணெண்ணெய் கேனை பறித்து தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தினா்.

இதுகுறித்து காயத்ரி கூறுகையில், திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் எந்த குற்றம் நடந்தாலும், அதில் எனது கணவரை தொடா்புபடுத்தி போலீஸாா் பொய் வழக்குப் பதிவு செய்கின்றனா். இதனால் வாழ்வாதாரத்தை இழந்து எங்கள் குடும்பம் நெருக்கடியை சந்தித்து வருகிறது. தற்போதும் மற்றொருவரின் வீட்டை அடையாளம் காட்டுவதற்கு எனக் கூறி எனது கணவரை அழைத்துச் சென்ற போலீஸாா், அவா் மீது மீண்டும் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனா் என்றாா்.

தீக்குளிக்க முயன்றவா்களை சமாதானப்படுத்திய போலீஸாா், அவா்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனா். இதனால் திண்டுக்கல் பேருந்து நிலையப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT