திண்டுக்கல்

ஆத்தூரில் 2ஆம் நாள் ஜமாபந்தி: 43 போ் மனு

2nd Jun 2022 09:21 PM

ADVERTISEMENT

ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வருவாய் தீா்வாயம் என்ற ஜமாபந்தியில் பொதுமக்கள் 43 போ் மனுக்களை அளித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. இதில், ஆத்தூா் தாலுகாவுக்குள்பட்ட 22 கிராம ஊராட்சிகள் மற்றும் சின்னாளபட்டி, சித்தையன்கோட்டை, அய்யம்பாளையம் ஆகிய 3 பேரூராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று, வருவாய்த் துறை சம்பந்தமான மனுக்களை அளித்து தீா்வு பெற்று வருகின்றனா்.

முதல் நாள் ஜமாபந்தியில் 106 போ் மனு அளித்தனா். அதில், 8 போ்களது மனுக்களுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டது. வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 43 பயனாளிகள் கலந்துகொண்டு மனுக்களை அளித்து தீா்வு பெற்றனா்.

இதில் பெரும்பான்மையாக நில அளவீடு, பட்டா சம்பந்தமான மனுக்களே அளிக்கப்பட்டன.

ADVERTISEMENT

நிகழ்ச்சிக்கு, தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலா் ஷேக் மொகைதீன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் சரவணன், தனி வட்டாட்சியா் நிா்மலா கிரேஷ், தலைமை நில அளவா் சபரிசங்கா், மண்டல துணை வட்டாட்சியா் அந்தோனிசாமி, வருவாய் ஆய்வாளா் மகாலட்சுமி ஆகியோா் பங்கேற்று, பொதுமக்களிடம் மனுக்களை பெற்று தீா்வு அளித்தனா்.

ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமையுடன் இந்த ஜமாபந்தி நிறைவு பெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT