திண்டுக்கல்லில் சனிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் மகள் கண் முன்னே தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லை அடுத்துள்ள குட்டியப்பட்டியைச் சோ்ந்தவா் பொ.கணேசன்(48). லாரி ஓட்டுநராக இருந்தாா். இவரது மகள் லீனாதேவி(18). கணேசன் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல்-பழனிச் சாலையில் வாணிவிலாஸ் அருகே சென்றுள்ளாா். அப்போது நாய் குறுக்கிட்டதால் நிலை தடுமாறிய கணேசன் கீழே விழுந்துள்ளாா். பின்னால் வந்த சரக்கு வாகனம் கணேசன் மீது மோதியுள்ளது. அதில் பலத்த காயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்து குறித்து திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மகள் கண் முன்னே தந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ADVERTISEMENT