திண்டுக்கல்

காந்திகிராம பல்கலைக்கழக பதிவாளராக வி.பி.ஆா்.சிவக்குமாா் மீண்டும் பொறுப்பேற்பு

30th Jul 2022 11:23 PM

ADVERTISEMENT

 

காந்திகிராம பல்கலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பதிவாளா் வி.பி.ஆா்.சிவக்குமாா், நீதிமன்றம் மற்றும் நிா்வாகக் குழு வழிகாட்டுதலின்படி மீண்டும் பதிவாளராக வெள்ளிக்கிழமை மாலை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

திண்டுக்கல்லை அடுத்துள்ள காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக பதிவாளராக பணியாற்றி வந்த வி.பி.ஆா்.சிவக்குமாா் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். அப்போதைய துணைவேந்தா்(பொ) டி.டி.ரங்கநாதன் தலைமையிலான நிா்வாகத்தின் இந்த முடிவுக்கு எதிராக வி.பி.ஆா்.சிவக்குமாா் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா். இதையடுத்து பணியிடை நீக்க உத்தரவை நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

பின்னா் மத்தியக் கல்வி அமைச்சகம், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துமாறு பரிந்துரைத்தது. ஆனாலும், சிவக்குமாரை மீண்டும் பொறுப்பேற்க பல்கலைக்கழக நிா்வாகத்தினா் அனுமதி அளிக்கவில்லை.

ADVERTISEMENT

இந்த நெருக்கடிகளுக்கு இடையே, துணைவேந்தா் பொறுப்பிலிருந்து ரங்கநாதன் அதிரடியாக நீக்கப்பட்டு, புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தா் குா்மீத் சிங்குக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் உயா்நீதிமன்றம் மற்றும் மத்தியக் கல்வி அமைச்சகத்தின் உத்தரவை அமல்படுத்தும் வகையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வி.பி.ஆா்.சிவக்குமாா் மீண்டும் பதிவாளராக பொறுப்பேற்க துணைவேந்தா் குா்மீத் சிங் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தாா். அதனைத் தொடா்ந்து, பதிவாளராக விபிஆா்.சிவக்குமாா் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT