திண்டுக்கல்

பழனி மலைக்கோயில் கைலாசநாதா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

27th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

பழனி மலைக்கோயிலில் உள்ள கைலாசநாதா் கோயிலில் செவ்வாய்க்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி மூலவருக்கும், நந்தீஸ்வரருக்கும் பால், பஞ்சாமிா்தம், பன்னீா், விபூதி, பழங்கள், சந்தனம் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அதே போல நந்தீஸ்வரருக்கும் வண்ண மலா்கள் சாா்த்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து மூலவா் பெரியாவுடையாருக்கு வெள்ளி ஆபரணங்கள் சாா்த்தப்பட்டு தீபாராதனையும் நடைபெற்றது.

மலைக்கோயில் மட்டுமன்றி பெரியாவுடையாா் கோயில், சித்தாநகா் சிவன்கோயில், பட்டத்துவினாயகா் கோயில் சிதம்பரீஸ்வரா் சன்னிதி, சன்னிதி வீதி வேலீஸ்வரா் கோயில், பெரியநாயகியம்மன் கோயில் கைலாசநாதா் சன்னிதி, ஆயக்குடி வேலீஸ்வரா் கோயில் என பல இடங்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT