திண்டுக்கல்

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

27th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலுள்ள சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

  திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயில், அபிராமி அம்மன் கோயில், முள்ளிப்பாடி திருகாமேஷ்வரா் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மூலவருக்கும், நந்திகேஷ்வரருக்கும் பால், தயிா், பன்னீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து அலங்கார ஆராதனை நடைபெற்றது.

 இதேபோல் நத்தம் கோவில்பட்டியில் அமைந்துள்ள கைலாசநாதா் கோயில் மற்றும் வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலிலும் பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்றன. பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT