திண்டுக்கல்

திருமணம் செய்வதாக சிறுமி கடத்தல்: ஓட்டுநா் போக்சோவில் கைது

7th Jul 2022 01:55 AM

ADVERTISEMENT

 

செம்பட்டி அருகே திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சிறுமியை கடத்திச் சென்ற வாகன ஓட்டுநரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே ஒட்டுப்பட்டியைச் சோ்ந்த சடையாண்டி மகன் ராஜபாண்டி (28). இவா், வாகன ஓட்டுநராக உள்ளாா். இந்நிலையில், இதே ஊரைச் சோ்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, ராஜபாண்டி கடத்திச் சென்ாக கூறப்படுகிறது. இதுகுறித்து செம்பட்டி காவல் நிலையத்தில், அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் வழக்குப் பதிந்து, ராஜபாண்டியையும், அந்த சிறுமியையும் பல்வேறு இடங்களில் தேடினா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அவா்களை போலீஸாா் கண்டுபிடித்தனா். இதில் ராஜபாண்டியை போக்சோ சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT